சுடச்சுட

  

  மகளிர் கலைக் கல்லூரியில் குடிநீர்ப் பற்றாக்குறை: எம்எல்ஏ நேரில் ஆய்வு

  By DIN  |   Published on : 26th June 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாலாஜாபேட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆர்.காந்தி எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்து உடனடியாக குடிநீர் விநியோகிக்க  அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
  தமிழகத்தில் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை சரிசெய்யாத அதிமுக அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தவும், தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதி  மக்களுக்கு  இலவசமாகத் தண்ணீர் கிடைக்க உதவ வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
  அதன் படி வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எம்எல்ஏ ஆர்.காந்தி தலைமையில் மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் டேங்கர் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் விநியோகித்து வருகின்றனர். அதேபோல் வாலாஜாப்பேட்டை ஒன்றியம் சென்னசமுத்திரம் கிராமத்தில் ஓன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இலவசமாகத் தண்ணீர் விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி  கலந்து கொண்டு  குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். 
  இதில் வாலாஜாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் சேஷா வெங்கட், பொதுக்குழு உறுப்பினர் க.சுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து வாலாஜாபேட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மற்றும் மாணவியர் விடுதியில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவதாக வந்த புகாரின் பேரில் எம்எல்ஏ ஆர்.காந்தி நேரில் சென்று கல்லூரி முதல்வரிடம் அது குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது கல்லூரிக்கும், மாணவியர் தங்கும் விடுதிக்கும் உடனடியாக குடிநீரை விநியோகிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai