சுடச்சுட

  

  மின்வாரிய அலுவலகத்தில் ஒரே நாளில் 174 பெயர் மாற்ற மனுக்களுக்குத் தீர்வு

  By DIN  |   Published on : 26th June 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணம் மின்வாரிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்வாரிய இணைப்புகள் பெயர் மாற்ற முகாமில் 174 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
  அரக்கோணம் கோட்ட அளவிலான முகாம் அரக்கோணம் விண்டர்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார். இதில், அரக்கோணம் நகரம், தெற்கு, பள்ளூர், சாலை, தக்கோலம் ஆகிய உட்கோட்டங்களில் நுகர்வோர் பங்கேற்றனர். அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து அலுவலர்கள் மனுக்களை பெற்று கணினியில் பதிவு செய்து பெயர் மாற்றத்தை உடனே செய்து கொடுத்தனர்.
  இப்பணிகளை உதவிச் செயற்பொறியாளர்கள் புனிதா, லதா, பாரி, ஜெயக்குமார் ஆகிய அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர். இதில், 174 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு பெயர் மாற்றம் செய்து தரப்பட்டது. அரக்கோணம் நகரில் இருந்து மட்டும் 141 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai