சுடச்சுட

  

  சீட்டுப் பணம் ரூ. 4 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
  ஆற்காட்டை அடுத்த விளாபாக்கத்தைச் சேர்ந்த குமார் உள்பட 22 பேர் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர். 
  அதில், ஆற்காட்டில் கோபால் என்பவர் ஏலச்சீட்டு, ரியல் எஸ்டேட் தொழில்கள் செய்து வந்தார். இதில், விளாபாக்கத்தைச் சேர்ந்த 22 பேர் வீட்டுமனை வாங்குவதற்காக மொத்தம் ரூ. 4 கோடி வரை முதலீடு செய்திருந்தோம். தவணைக் காலம் முடிந்த பிறகும் வீட்டு மனை அளிக்காமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் காலதாமதம் செய்து வந்தார். 
  இந்நிலையில், திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு கோபால் தலைமறைவாகி விட்டாராம். 
  எனவே, நாங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற்றுத்தரவும், மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என தெரிவித்துள்ளனர். இப்புகார் மீது விசாரணை நடத்த ஆற்காடு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai