சுடச்சுட

  

  வேலூர் கோட்டையின் தொன்மையைப் பாதுகாக்க விரைவு தபால்கள் அனுப்பி வைப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் கோட்டையின் தொன்மையைப் பாதுகாக்கும் விதமாக கோட்டையைச் சுற்றி புதிய கட்டடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வேலூர் மாவட்ட வணிகர்கள் மத்திய தொல்லியல் துறைக்கு சுமார் 500 விரைவு தபால்களை செவ்வாய்க்கிழமை அனுப்பினர்.
  மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள வேலூர் கோட்டையைச் சுற்றி 100 மீட்டர் தூரத்துக்கு புதிதாக எந்தவித கட்டடமும் கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கோட்டையைச் சுற்றி புதிதாகக் கட்டடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டால் கோட்டையின் தொன்மை பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
  இதையடுத்து வேலூர் கோட்டையின் தொன்மையைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை விரைவு தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 
  வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வணிக சங்கத் தலைவர் ஆர்.பி.ஞானவேலு தலைமை வகித்தார். இதில், சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று சுமார் 500 விரைவு தபால்களை அனுப்பி வைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai