மின் இணைப்பு எண் ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கூறி பணம் வசூல்

ஆம்பூர் பகுதியில் மின் இணைப்பு எண் ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கூறி சிலர் வீடு வீடாகச் சென்று பணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

ஆம்பூர் பகுதியில் மின் இணைப்பு எண் ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கூறி சிலர் வீடு வீடாகச் சென்று பணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் வீடுகளுக்கு திங்கள்கிழமை சிலர் சென்று தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து வருவதாகக் கூறி, மின் இணைப்புகளின் எண்ணை ஸ்டிக்கராக செய்து மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் ஒட்டிவிட்டு அதற்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை வசூலித்தனர்.
சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர்கள் சிலர் தமிழ்நாடு மின்சார வாரிய ஆம்பூர் உதவிச் செயற்பொறியாளர் (பொறுப்பு) மீனாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மின்வாரியத்தின் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி ஏதும் நடைபெறவில்லை. எந்தப் பணியாளர்களையும் அனுப்பவில்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணம் தர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 
மேலும், மின்வாரியப் பணியாளர்கள் என்று கூறிக் கொண்டு ஸ்டிக்கர் ஒட்டும் நபர்கள் வந்தால் உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com