அரக்கோணம்-சேலம் பாசஞ்சர் ரயில் தொடக்க விழா
By DIN | Published On : 02nd March 2019 06:29 AM | Last Updated : 02nd March 2019 06:29 AM | அ+அ அ- |

சேலம்-காட்பாடி இடையே இயங்கி வந்த பாசஞ்சர் ரயிலின் சேவை அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து அந்த ரயிலின் தொடக்க விழா அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ரயிலின் தொடக்க விழா அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ சு.ரவி ஆகியோர் பச்சை விளக்கைக் காண்பித்து ரயிலை அனுப்பி வைத்தனர்.
அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி, செயலர் ரகுநாதன், நகர அதிமுக செயலர் கே.பாண்டுரங்கன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாபாஸ் பாபு உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
அரக்கோணம் சேலம் பாசஞ்சர் ரயிலில் கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இது மின்சார ரயில் ஆகும். அரக்கோணத்தில் இருந்து காட்பாடி வரை சோளிங்கர், வாலாஜாரோடு, முகுந்தராயபுரம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் இந்த ரயில் அதைத் தொடர்ந்து சேலம் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.