எருது விடும் விழாவில் காளை முட்டி விவசாயி சாவு
By DIN | Published On : 02nd March 2019 06:34 AM | Last Updated : 02nd March 2019 06:34 AM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே எருது விடும் விழாவில் காளை முட்டியதில் விவசாயி உயிரிழந்தார்.
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் வெள்ளிக்கிழமை எருது விடும் விழா நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அருகில் உள்ள முக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னதுரை (55) வேடிக்கை பார்க்க அங்கு சென்றுள்ளார். அவரை காளை முட்டியதில், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தார்.
கிராமிய போலீஸார் அவரது சடலத்தைக் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் விழா மேடையருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.