மாணவர்கள் தேர்வெழுத ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை
By DIN | Published On : 02nd March 2019 02:41 AM | Last Updated : 02nd March 2019 02:41 AM | அ+அ அ- |

எழுதுபொருள்களை மாணவியருக்கு வழங்கிய கோயில் நிர்வாகி பி.ஆர்.சி. மூர்த்தி.
ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை செய்து, பூஜிக்கப்பட்ட எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்கியது. இந்நிலையில், ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டி, நவல்பூர் ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் ஹயக்கிரீவருக்கு வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், பூஜையில் வைக்கப்பட்ட எழுதுபொருள்களை, கோயில் நிர்வாகி பி.ஆர்.சி. மூர்த்தி மாணவ, மாணவியருக்கு வழங்கி, வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில், ஆன்மிக அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வகுமார், இளஞ்செழியன், மோகன சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.