கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 04th March 2019 12:59 AM | Last Updated : 04th March 2019 12:59 AM | அ+அ அ- |

வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
சென்னையிலுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முகாமுக்கு, கல்லூரியின் துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் என்.ரமேஷ் முகாமைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் எம்.ஞானசேகரன், வரவேற்றார். இதில், ஃபோர்டு நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (மனித வளப் பிரிவு) வெங்கட் பாலாஜி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்தனர்.
முகாமில், பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து சுமார் 560 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இவர்களில் நேர்காணலுக்கு 250 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் பேராசிரியர் எஸ். அருண்குமார், கல்லூரி வேலை வாய்ப்பு அதிகாரி பி.சரவணன் செய்திருந்தனர்.