ரூ.10 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 04th March 2019 12:58 AM | Last Updated : 04th March 2019 12:58 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் அருகே ரூ. 10 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பத்தூர் அனேரி- ராச்சமங்கலம் ஊராட்சி பகுதியில் உள்ள பிரதான தார்ச்சாலைகள் மிகவும் பழுதடைந்திருந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இது குறித்து திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன் பேரில், அவரது சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இத்திட்டத்துக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை அமைக்கும் பணியின் பூமி பூஜைக்கு நல்லதம்பி தலைமை வகித்தார். கந்திலி வடக்கு ஒன்றியச் செயலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.