சுடச்சுட

  

  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து.
  திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த 2015 ஆகஸ்ட் 23-ஆம் தேதி பால் வாங்கக் கடைக்குச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மாயன் (48), சிறுமியை வழிமறித்து அப்பகுதியில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த வீட்டுக்குள்அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமி கூச்சல் எழுப்பியதை அடுத்து அவர் சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.
  இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மாயனை கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றம்சாட்டப்பட்ட மாயனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து மாயன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai