சுடச்சுட

  

  தேர்தல் நடத்தை விதிமீறல்: புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்

  By DIN  |   Published on : 16th March 2019 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தேர்தல் ஆணையம் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் தேர்தல் விதிமீறல் புகார்களை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
  மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
  இதன் ஒருபகுதியாக, வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் இயஐஎஐக என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தச் செயலியை கேமரா வசதியுடன் கூடிய தற்போதைய எந்தவொரு ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி அல்லது ஐஃபோன் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  
  தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக புகார்கள் தெரிவித்து, பின்னர் அதை சரிபார்க்கும் அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டு வருவதை கவனத்தில் கொண்டும், தவறான புகார்கள் அளித்து அலுவலர்களை திசைதிருப்புவதைத் தடுக்கும் நோக்கில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தெரிய வந்தால் இந்தச் செயலியைப் பயன்படுத்தி படங்களையும், 2 நிமிடங்கள் ஓடக்கூடிய விடியோக்களாகவும் எடுத்து அனுப்பலாம். புகைப்படங்கள், விடியோக்களை எடுக்கும்போது அந்த நிகழ்வு நடைபெறும்  இடம், நாள், நேரத்துடன் பதிவாகும். 
  இதை செயலியில் பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு "பீப்' ஒலியுடன் தகவல் பரிமாறப்படும். புகார் பெற்ற 5 நிமிடத்தில் தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.
  பொதுமக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai