சுடச்சுட

  


  ஆம்பூர் அருகே நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்திச் சென்றன.
  ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சிக்கு உள்பட்ட பைரப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி துரை (60). இவரது நிலத்தில் நெல், வாழை பயிரிடப்பட்டுள்ளன. வனப்பகுதி எல்லையோரம் விவசாய நிலம் அமைந்துள்ளது.
  இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்த வந்த காட்டுப் பன்றிகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.
  தகவலறிந்த ஆம்பூர் வனத் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும், காட்டுப் பன்றிகள் விவசாய நிலத்துக்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தனர். 
  காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி துரை கோரிக்கை விடுத்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai