சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல்: தமிழக-ஆந்திர எல்லையில் தீவிர கண்காணிப்பு

  By DIN  |   Published on : 16th March 2019 11:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
  அதையொட்டி வேலூர் மாவட்டத்தில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டையில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. அங்கு போலீஸார் முகாமிட்டு, 24 மணி நேரமும் சிசிடி டிவி கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினரும் இப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுவினரின் சோதனையின்போது பணம், பொருள்கள் சிக்கினால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  தேர்தல் கண்காணிப்புக் குழு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி: வேலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு என தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பயன்படுத்தும் 26 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் கண்காணிப்புக் குழுவினர் எந்தப் பகுதியில் உள்ளார்கள் என்பது குறித்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
  ரௌடிகளைக் கண்காணிக்கும் போலீஸார்: மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ள ரௌடிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.  சிலர் சிறையிலும், சிலர் தலைமறைவாகவும், சிலர் ஜாமீனிலும் உள்ளனர். அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai