சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,089 பேர் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிகளின்படி, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அவற்றை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேணடும். 
  வேலூர் மாவட்டத்தில் 1,164 பேர் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். அவர்களில் அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் அடங்குவர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை வரை 1,089 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். 
  தொடர்ந்து மற்ற 303 பேரும் தங்கள் துப்பாக்கிகளை ஓரிரு நாள்களில் காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். 
  வங்கிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் காவலர்களாகப் பணியாற்றுவோருக்கு அளிக்கப்பட்டுள்ள 272 துப்பாக்கிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai