ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதியின் அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதியின் அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் காமராஜ் தலைமை வகித்தார். ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆற்காடு, திமிரி, கலவை, வாழைப்பந்தல் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில், ஒரு சில பகுதிகளில் அனுமதி பெறாமல் வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றை அழிக்க வேண்டும். ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதியளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தினர். 
இக்கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் விதிமுறைகளை அனைத்துக் கட்சியினரும் கடைப்பிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com