கன்ஷிராம் பிறந்த நாள் விழா

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் பிறந்த நாள் விழா அக்கட்சியின் சார்பில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் பிறந்த நாள் விழா அக்கட்சியின் சார்பில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
கட்சியின் ஆம்பூர் நகரத் தலைவர் ஆர்.ராஜி தலைமை வகித்தார். செயலர் எஸ்.லோகேஷ் வரவேற்றார். வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் என்.பிச்சை சிறப்புரையாற்றினார்.  இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஆம்பூர் தொகுதி பொருளாளர் ஏ. சேரலாதன், துணைத் தலைவர் சி.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணித் தலைவர் அருண் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com