வேலூர் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்கும்: ஏ.சி.சண்முகம்

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்கும் என புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆம்பூரில் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்கும் என புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆம்பூரில் தெரிவித்தார்.
ஆம்பூர் ப்ரியா மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது:
தற்போது அமைந்துள்ள அதிமுக கூட்டணி நிரந்தரக் கூட்டணியாகும்.  இந்தக் கூட்டணி மெகா கூட்டணி. இது மிகவும் சக்தி வாய்ந்த எஃகுக் கூட்டணியாகும். ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் போல வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலிலும் திமுக டெபாசிட் இழக்கும். 
நான் வெற்றி பெற்றால், என்னுடைய மருத்துவமனையில் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றார் அவர்.
அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், அதிமுக நிர்வாகிகள் எம்.மதியழகன், ஆர்.வெங்கடேசன், பாமக முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா, பாஜக மாவட்டத் தலைவர் கொ.வெங்கடேசன், புதிய நீதிக் கட்சியின் சண்முகம், தேமுதிக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியில் அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் தலைமை வகித்தனர். நகரச் செயலர் சதாசிவம் வரவேற்றார். 
புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவரும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணியின் வேட்பாளருமான ஏ.சி சண்முகம் பேசினார்.  
இதில், ஆலங்காயம் ஒன்றியச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவி.சம்பத்குமார், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கோபால், பேரூராட்சிச் செயலர்கள் டி.பாண்டியன், பிச்சாண்டி மற்றும் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com