"இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக இருப்பேன்'

இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக நான் இருப்பேன் என புதிய நீதிக் கட்சியின் தலைவரும், வேலூர் மக்களவைத் தொகுதி

இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக நான் இருப்பேன் என புதிய நீதிக் கட்சியின் தலைவரும், வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் வியாழக்கிழமை கூறினார்.
ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நான் வெற்றி பெற்றால் வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மக்களவை உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும்.  படித்து முடித்து, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனை மற்றும் அதற்குத் தயார் ஆவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இயங்கும் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படும்.  
ஆம்பூரில் தொழில் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  
கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்குப் பரிசு:  அதிக வாக்குகளைப் பெற்று தரும் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கு தலா ஒரு தொகுதிக்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வீதம் 12 மோட்டார் சைக்கிள்கள் தரப்படும். சிறப்பாகப் பணியாற்றி அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொண்டர்கள் ரயில் மூலம் தில்லிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.  அதேபோல அதிக வாக்குகளை பெற்றுத் தரும் கட்சி நிர்வாகிகள் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
கூட்டத்துக்கு மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம். மதியழகன் வரவேற்றார். மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, பாஜக மாவட்டத் தலைவர் கொ. வெங்கடேசன், பொதுச் செயலர் வாசுதேவன், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டி.கே. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com