உருது மொழி கருத்தரங்கம்

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் உருதுத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் உருதுத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரியின் தாளாளர் அப்ரார் அஹமது தலைமை வகித்தார். மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கப் பொதுச் செயலர் ஜியாவுதீன் அஹமது, கல்லூரி முதல்வர் 
எஸ்.ஏ.சாஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உருதுத் துறைத் தலைவர் முஹமது யாசிர் வரவேற்றார். 
இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 50 பேர் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இதில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சையது முஹமது ஹசீம், கர்நாடக மாநில உருது மொழிக் கழக முன்னாள் தலைவர் எம்.என்.ஷாயித், எழுத்தாளர் ஹலமாஜா பாரூக், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் சையது சகாபுதீன், சென்னைப் பல்கலைக்கழக உருதுத் துறைத் தலைவர் கே.ஹபீப் அஹமது ஆகியோர் பேசினார்கள்.
இதில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com