வேலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் நாளை பிரசாரம்

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 23, 24) பிரசாரம் செய்ய உள்ளார்.
அதிமுக கூட்டணியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் "அக்ரி' கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இது தவிர, சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் ஆம்பூர் தொகுதியில் ஜே.ஜோதிராமலிங்கராஜா, குடியாத்தம் (தனி) தொகுதியில் ஆர்.மூர்த்தி, சோளிங்கர் தொகுதியில் ஜி.சம்பத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23, 24) ஆகிய இரு நாள்கள் பிரசாரம் செய்ய உள்ளார். 
சனிக்கிழமை காலை 9 மணிக்கு சேலம் இணைப்புச் சாலை, 9.30 மணிக்கு திருப்பத்தூர், 10 மணிக்கு ஆசிரியர் நகர், 10.30 மணிக்கு ஜோலார்பேட்டை, 11.30 மணிக்கு வாணியம்பாடி நகரம், 11.40 முதல் பகல் 1 மணி வரை ஆம்பூர் நகரம் உள்ளிட்ட 4 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். மாலை 4 மணிக்கு ஆம்பூர் புறவழிச்சாலை, 5 மணிக்கு உமராபாத், மாலை 6 மணிக்கு பேர்ணாம்பட்டு, இரவு 7 மணிக்கு கே.வி.குப்பம், 8 மணிக்கு லத்தேரி, 8.30 மணிக்கு காட்பாடி சித்தூர் நிலையம், 9 மணிக்கு வேலூர் புது மாநகராட்சி, இரவு 9.30 மணிக்கு மண்டித் தெரு ஆகிய இடங்களில் பேச உள்ளார். இரவு வேலூரில் தங்குகிறார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வேலூர் வள்ளலார், 9.30 மணிக்கு ஆற்காடு பேருந்து நிலையம், 10 மணிக்கு முத்து கடை பேருந்து நிலையம், 10.45 மணிக்கு பானாவரம் இணைப்புச் சாலை, பகல் 12 மணிக்கு காவேரிப்பாக்கம் பூங்கா, 12.30 மணிக்கு பனப்பாக்கம் பேருந்து நிலையம், 1 மணிக்கு நெமிலி, மாலை 4 மணிக்கு அரக்கோணம், மாலை 5.15 மணிக்கு அரக்கோணம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com