Enable Javscript for better performance
அப்துல் ஹக்கீம் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அப்துல் ஹக்கீம் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

    By DIN  |   Published on : 28th March 2019 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் ஆய்வு செய்தனர். 
    50 ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்லூரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்நிலையில் தேசிய தர மதிப்பீட்டு குழுவின் தலைவரும் தெலங்கானா மாநிலப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஏ.வேணுகோபால் ரெட்டி, கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் கார்த்திக் சந்திரபால், உறுப்பினர் சிவபிரகாஷ்ஹோம்நாத் ஆகியோர் கொண்ட குழுவினர் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாள்கள் கல்லூரியில் ஆய்வு செய்து, அதன் தர மதிப்பீட்டு அறிக்கையை வழங்கினர். 
    கல்லூரித் தாளாளர் அப்ரார் அஹமது, முதல்வர் எஸ்.ஏ.சாஜித் மற்றும் நிர்வாகக் குழுவினர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai