Enable Javscript for better performance
திருமலையில் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்த 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருமலையில் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்த 4 பேர் கைது

    By DIN  |   Published on : 28th March 2019 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமலைக்கு வரும் பக்தர்களிடம் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்த 4 பேரை போலீஸார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கைது செய்தனர்.
    திருமலையில் பக்தர்கள் கூடும் முக்கிய பகுதிகளில் நன்றாக உடை உடுத்திக் கொண்டு, தங்களை வசதியானவர்களாகக் காட்டிக்கொண்டு தங்களின் பணம் முதலியவை திருடுபோனதாகக் கூறி, நூதன முறையில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 4 பேரை திருமலை போலீஸார் கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் புதன்கிழமை கைது செய்தனர். இவர்கள் பக்தர்களிடம் அப்பாவி போல் நடித்து ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
    முதல்கட்ட விசாரணையில், இவர்கள் 4 பேரும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பிழைப்புக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மற்ற விவரங்கள் முழு விசாரணைக்கு பின் வெளியிடப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai