Enable Javscript for better performance
தொழிலாளி கொலை: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    


    ஆற்காடு அருகே தொழிலாளியை ரயில் தண்டவாளத்தில் வீசி கொலை செய்த 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 
    காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (42).  அவரின் மனைவி ஜீவாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாருக்கும் தவறான உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை ராமு கண்டித்தாராம். 
    இதனால், ஆத்திரமடைந்த விஜயகுமார், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த குமார் (37), வினோத்குமார் ஆகியோர் ராமுவை கடந்த 24-ஆம் தேதி வீட்டிலிருந்து காரில் அழைத்துச் சென்றனர். 
    மேல்விஷாரம் அருகே உள்ள தென்நந்தியாலம் அரசு மதுக்கடையில் மது அருந்தியுள்ளனர். பின்னர், போதையில் இருந்த ராமுவை கார்ணாம்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசினர். அப்போது வந்த ரயிலில் அடிபட்டு  ராமு உயிரிழந்தது தெரியவந்தது. 
    இதையடுத்து விஜயகுமார், குமார், வினோத்குமார் ஆகிய 3 பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai