Enable Javscript for better performance
பள்ளிகொண்டா அருகே வழிப்பறி :  மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகொண்டா அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    ஆம்பூர் பி-கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் உமர் (24).  இவர் ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வேலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.  அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த முஹம்மத் ஷைன் (26) சென்றுள்ளார்.  பள்ளிகொண்டா அருகே சின்னகோவிந்தம்பாடி பகுதியில் சென்றபோது இருவர் வழிமறித்து அவர்களிடமிருந்த ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டனர்.
     பள்ளிகொண்டா போலீஸார் நடத்திய விசாரணையில் முஹம்மத் ஷைன் கொடுத்த தகவலின் பேரில் ஆம்பூர் பி-கஸ்பா பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (30), முதசீர் (33) ஆகிய இருவரும் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.  போலீஸார் வழக்குப் பதிவு செய்து முஹம்மத் ஷைன், அப்துல் ரஹ்மான், முதசீர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai