Enable Javscript for better performance
வாணியம்பாடியில் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாணியம்பாடி டேனரி அசோசியேஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தோல் தொழிலதிபர்களை சந்தித்து கச்சேரி சாலையில் உள்ள அலுவலகத்தில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
    சங்கத் தலைவர் முகமதுமுபீன் தலைமை வகித்தார். மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: பாஜகவுடன் அதிமுக தற்போது வைத்துள்ள கூட்டணி தேர்தலுக்கு மட்டுமே. கொள்கைக்கு அல்ல. பாஜகவின் கொள்கை வேறு. அதிமுகவின் கொள்கை வேறு. அதிமுக எப்போதும் திராவிடக் கட்சிதான். 
    தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் பேசியது: தோல் தொழிற்சாலைகளுக்கு எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும் அதிமுக அரசு முன்நின்று தீர்க்கும் என்றார். 
    வாணியம்பாடி டேனரி அசோசியேஷனில் நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai