Enable Javscript for better performance
விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க நடவடிக்கை: ஜெகத்ரட்சகன்- Dinamani

சுடச்சுட

    

    விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க நடவடிக்கை: ஜெகத்ரட்சகன்

    By DIN  |   Published on : 28th March 2019 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறினார்.
    அரக்கோணத்தை அடுத்த நெமிலி ஒன்றியத்துக்கு உள்பட்ட திருமாதலம்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின் போது அவர் பேசியது:
    அரக்கோணம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளின் கவலையே தங்களது விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு போதுமான விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான். திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களை அவர்களே நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்யும் நிலையை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பாஜக ஆட்சியில் இல்லாத நிலை காணப்படுகிறது. இந்த நிலை மாற்றப்படும் என்றார் அவர். 
    மாவட்டப் பொருளாளர் மு.கன்னையன், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலர் பெ.வடிவேலு, பொதுக்குழு உறுப்பினர் பவானி, தனசேகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெருமாள், நெமிலி ஒன்றிய காங்கிரஸ் தலைவர் ஆர்.ரவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில இளைஞர் அணி துணைச் செயலர் என்.தமிழ்மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai