தேர்தல் பறக்கும் படை சோதனை: 6 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல்

அரக்கோணம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வேனில் எடுத்து வரப்பட்ட 6 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை சோதனை: 6 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல்


அரக்கோணம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வேனில் எடுத்து வரப்பட்ட 6 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரக்கோணம் மக்களவைத் தேர்தலுக்கான பறக்கும் படையினர் நெமிலி வட்டார வேளாண்மை அலுவலர் முகமது முபாரக், சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி உள்ளிட்டோர் புதன்கிழமை இரவு அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தக்கோலம் கூட்டு ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த வேன் ஒன்றை சோதனையிட்டபோது அதில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆறு சாமி சிலைகள் இருந்தன.
அலுவலர்களின் விசாரணையில் அச்சிலைகளை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் இருந்து கொண்டு வருவதாகவும், அரக்கோணத்தை அடுத்த கீழாந்துறையில் உள்ள ராஜமாதங்கி கோயிலுக்கு கொண்டு செல்வதாகவும் அந்த வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர். 
ராஜமாதங்கி, வாராஹி, பிரசாந்தி, ஓடாங்கி, புவனேஸ்வரி, மகாமேரு ஆகிய அந்த 6 சாமி சிலைகளும் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. எனவே, அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்து அரக்கோணம் உதவி தேர்தல் அலுவலரான வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரனிடம், வட்டாட்சியர் ஜெயக்குமார் முன்னிலையில் ஒப்படைத்தனர். 
இதையடுத்து, அச்சிலைகள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. உரிய ஆவணங்களைக் காட்டினால் அச்சிலைகளை உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என தேர்தல் அலுவலர் வேணுசேகரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com