அங்கீகாரமின்றி செயல்படும் 44 பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம்: ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்

வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் 44 தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார். 


வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் 44 தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து வகைப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். 
இதையடுத்து அங்கீகாரமின்றி எந்த ஒரு பள்ளியும் செயல்படக்கூடாது என்று கல்வித் துறை சார்பில் ஏற்கெனவே பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்து வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்பட்டு வந்த 44 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு அந்தப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரக்கோணம் நேருஜி நகர் ஜெய்ஜீ சீனியர் செகண்டரி பள்ளி, நர்சரி (மற்றும்) தொடக்கப் பள்ளி, அரக்கோணம் டயானா மெட்ரிக் பள்ளி, அரக்கோணம் ரெயின்போ நர்சரி (ம) பிரைமரி பள்ளி, ருமலா இன்டர்நேஷ்னல் பள்ளி, நெமிலி சாய்ராம் நகர் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி, அரக்கோணம் அரிகிலபாடி ஸ்ரீ வெற்றிவேல் வித்யாலயா நர்சரி (ம) பிரைமரி பள்ளி.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் கோல்டன் குரோத் நர்சரி (ம) பிரைமரி பள்ளி, பாரதி  நர்சரி (ம) பிரைமரி பள்ளி, கூடலூர் சக்ரி நர்சரி (ம) பிரைமரி பள்ளி, ஆற்காடு ஒன்றியம் கீழ்குப்பம் கலைமகள் நர்சரி (ம) பிரைமரி பள்ளி, கத்தியவாடி பிரில்ஸ் வித்யாஸ்ரம் மழலையர் (ம) 
தொடக்கப் பள்ளி, வேலம் மதர் இந்தியா மழலையர் (ம) தொடக்கப்பள்ளி, லோகாபுரம் லோட்டஸ் மழலையர் (ம) தொடக்கப்பள்ளி, ரெண்டாடி தர்ஷன் மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, ஜெ.குரு மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, மேல்பாடி மகாலட்சுமி ஹயகிரீவர் மழலையர் (ம) தொடக்கப் பள்ளி.
சோளிங்கர் ஒன்றியம், வாணி வித்யாலயா மழலையர் (ம) 
தொடக்கப் பள்ளி, புளூமிங் மழலையர் (ம) தொடக்கப்பள்ளி, வாலாஜாபேட்டை அகஸ்தீஸ்வரர் மழலையர் (ம) தொடக்கப்பள்ளி, வன்னிவேடு, வர்ணவீனா மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, மணியம்பட்டு கிரைஸ்ட்  கிங் மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, வன்னிவேடு வெற்றி வித்யாலயா மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, எடக்குப்பம்.
கிரிஷ் மழலையர் (ம) தொடக்கப்பள்ளி, தகரகுப்பம் செயின்ட் பில்ஸ் ஜீனியஸ் மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, வள்ளலார் நகர் ஸ்ரீ வெற்றிவேலன் இன்டர்நேஷனல் பள்ளி, வாலாஜாபேட்டை (மேற்கு) பாடியம்பாக்கம் விஸ்டம் மெட்ரிக் பள்ளி, தென்றல் நகர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி.
வேலூர், பாகாயம் இன்ஃபா மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, அணைக்கட்டு ஒன்றியம், விரிஞ்சிபுரம் வில்லா மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, மதராஸ் வில்லா மகளிர் மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, செதுவாலை, செயின்ட் மேரீஸ் மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, பள்ளிகொண்டா செயின்ட் ஜோகன்ஸ் மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, சின்னஅல்லாபுரம் சூர்யா மழலையர் (ம) தொடக்கப் பள்ளி, காட்பாடி ஹோலி டிரினிடி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, ஆம்பூர் கிருஷ்ணய்யர் தெரு அல்-அமீன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, குடியாத்தம், பொன்னம்பட்டி எவர் கிரீன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி.
காத்தாடி குப்பம் ஹயகிரீவா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, மீனூர் ஏ.எல்.டி. மழலையர் தொடக்கப் பள்ளி, பேர்ணாம்பட்டு அல்ப்லா மழலையர் தொடக்கப் பள்ளி, ஏ.எஸ்.எச்.எஃப்.எச்.ஏ.எம்.எஸ். மழலையர் தொடக்கப் பள்ளி, துத்துப்பட்டு எனாக் லிம்ரா மழலையர் தொடக்கப் பள்ளி, நோபல் நர்சரி, தொடக்கப் பள்ளி, கிரீன்வேலி சிபிஎஸ்இ பள்ளி, ஆலங்காயம் வேல் மெட்ரிக் பள்ளி, செக்குமேடு அப்துல்கலாம் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 44 பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து, இந்தப் பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com