22, 23-இல் அறிவியல் மையத்தில் எந்திரனியல் பயிற்சி

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் 5 முதல் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக எந்திரனியல் (ரோபோடிக்ஸ்) பயிற்சி முகாம் வரும் 22, 23-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் 5 முதல் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக எந்திரனியல் (ரோபோடிக்ஸ்) பயிற்சி முகாம் வரும் 22, 23-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட அறிவியல் அலுவலர் துரைராஜ் ஞானமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் 5-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக எந்திரனியல் பயிற்சி முகாம் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. 
இந்த இரு நாள் பயிற்சி முகாமில் இவி-3 ரோபோட்டின் பாகங்களைத் தொகுத்து வடிவமைத்து செயல்முறைப்படுத்த விரிவான பயிற்சி அளிக்கப்படும். பங்கு பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட அறிவியல் மையம், தேசிய நெடுஞ்சாலை, சத்துவாச்சாரி, வேலூர் என்ற முகவரியில் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு முதலில் வரும் 30 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பதிவு செய்ய வரும் 20-ஆம் தேதி கடைசி நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com