கிணறுகளில் விழுந்து 3 பேர் பலி
By DIN | Published On : 07th May 2019 07:26 AM | Last Updated : 07th May 2019 07:26 AM | அ+அ அ- |

வாணியம்பாடி பகுதிகளில் வெவ்வேறு கிணறுகளில் தவறி விழுந்து 3 பேர் பலியாகினர்.
வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (50). கூலித் தொழிலாளி. கடந்த 3-ஆம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் அவர் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் வாணியம்பாடி நகர போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32), திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் கிராமிய போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டனர்.
ஆலங்காயத்தை அடுத்த நாயக்கனூர் நொசக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராமு (31), காவலூரில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் கயிறு கட்டி இறங்கியபோது தவறி விழுந்து இறந்தார்.
இச்சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.