ரயில் பயணியிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 07th May 2019 07:26 AM | Last Updated : 07th May 2019 07:26 AM | அ+அ அ- |

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே பயணியிடம் மூன்றரை சவரன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (35). இவர், கடந்த வாரம் குடும்பத்துடன் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டு, சனிக்கிழமை குடும்பத்தினருடன் திருப்பதியில் இருந்து மைசூரு செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்தார்.
குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக ரயில் நின்று கொண்டிருந்தபோது, சந்திரசேகரனின் சகோதரி பிரேமா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றாராம். இதுகுறித்து சந்திரசேகர் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸில் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.