முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ரயில்வே கேட் பராமரிப்பு: வாகனங்கள் செல்லத் தடை
By DIN | Published On : 15th May 2019 07:11 AM | Last Updated : 15th May 2019 07:11 AM | அ+அ அ- |

பார்சம் பேட்டை ரயில்வே கேட் வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு இரு நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ரயில்வே கேட் பழுதடைந்துள்ளது. இந்த கேட்டின் பராமரிப்புப் பணி, வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே அவ்வழியாக பைக் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் கனரக வாகனங்கள் கேத்தாண்டப்பட்டி ரயில்வே கேட் வழியாகவும், சிறிய ரக வாகனங்கள் பக்கிரிதக்கா ரயில்வே தரைப் பாலத்திலும் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.