முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு
By DIN | Published On : 15th May 2019 07:12 AM | Last Updated : 15th May 2019 07:12 AM | அ+அ அ- |

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருடப்பட்டது.
ஆம்பூர் அருகே மோதகப்பல்லி ஊராட்சி ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமளா (55). இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்றார். திங்கள்கிழமை வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே 8 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.