சுடச்சுட

  

  அரக்கோணம் ஸ்ரீசபரிமலை சாஸ்தா சபை சார்பில் ஸ்ரீ ஜோதிசொரூபன் வழிபாடு நூல் வெளியீட்டு விழா அரக்கோணம் வட்டம், நாகவேடு எல்லையம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.
  இந்நூலின் முதல் பிரதியை தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட அரக்கோணம் ஜி.கே.ரவி, ஸ்ரீ பாண்டுரெங்க வேணுகான சபை செயலர் கோப்பண்ணா ரவி, ஜி.நமச்சிவாயம், ஜி.வளையாபதி, எம்.வெங்கடாசலம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
  ஐயப்ப பக்தர்களின் வழிபாடு தொடர்பாக மாலை அணிந்த நாள் முதல் பின்பற்ற வேண்டிய விரத நெறிமுறைகள் மற்றும் பல்வேறு ஐயப்ப பாடல்கள் தொகுத்து எழுதப்பட்டுள்ளதாக நூலசிரியர் அரக்கோணம் இ.மாணிக்கவேலு தெரிவித்தார்.
  நாகவேடு ஆர்.கருணாகரன் தலைமை வகித்தார். வி.கோவிந்தராஜி தொடக்க உரையாற்றினார். மருத்துவர் எஸ்.பன்னீர்செல்வம், கே.வாழவந்தான், உதவி  ஆசிரியர்கள் ஜி.பாலாஜி, என்.ரகுமேஸ்திரி, இ.குமார், எஸ்.கதிர், கவிஞர்இளையபாரதி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai