சுடச்சுட

    

    ஆலங்காயம் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட 45 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
    ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.அன்புசெல்வம் தலைமையில் இளநிலை உதவியாளர், அலுவலகப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆலங்காயம் வாரச்சந்தை, பிரதான சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர். 
    அப்போது 40-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து 45 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ. 6 ஆயிரத்து 300 அபராதம் வசூல் செய்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai