Enable Javscript for better performance
மகா முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை மகா பிரத்யங்கரா தேவி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகா முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    பாலாற்றங்கரையில் மிஸ்ரி நகரில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நள்ளிரவில் மகா நிகும்பலா யாகம் நடைபெற்று வருகிறது. கோயில் வளாகத்தில் கருப்பண்ணசாமி, காலகாளி, ஜடா முனீஸ்வரர், மகா முனீஸ்வரர் ஆகிய விக்கிரகங்கள் அண்மையில் அமைக்கப்பட்டன. அவற்றுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
    அதன்படி கோயில் அறங்காவலர் பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில், காலை விக்னேஸ்வர பூஜை, பரிவார பூஜை, 108 கலச பூஜை, மகா மூலமந்திரம், மகா பூர்ணாஹுதி, அதைத் தொடர்ந்து கலசப் புறப்பாடு நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத, கருப்பண்ணசாமி, காலகாளி, ஜடா முனீஸ்வரர், மகா முனீஸ்வரர் விக்கிரகங்களுக்கு புனித நீர் வார்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  
    பின்னர் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இந்த விழாவில் ராணிப்பேட்டை சுற்று வட்டாரம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்களும் பங்கேற்று வழிபட்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai