தர்மராஜா கோயில் மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 18th May 2019 04:01 AM | Last Updated : 18th May 2019 04:01 AM | அ+அ அ- |

கார்ணம்பட்டு தர்மராஜா சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கலசப் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மாகாதேவ மலை மகானந்த சித்தர், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, கோயில் கோபுரக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் கார்ணம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கார்ணம்பட்டு, ஆழ்வார்த்தாங்கல் கிராம மக்கள் செய்திருந்தனர்.