தனியார் பள்ளி மாணவர்கள் ஐஜிசிஎஸ்சி தேர்வில் சிறப்பிடம்
By DIN | Published On : 20th May 2019 07:39 AM | Last Updated : 20th May 2019 07:39 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை ஜி.கே.உலகப் பள்ளி மாணவர்கள் 11, 12-ஆம் வகுப்பு ஐஜிசிஎஸ்சி எனப்படும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அவர்களில் மாணவர் கங்காதரன் ஜெய்குமார் உரியியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் ஏ-பிளஸ் மதிப்பைப் பெற்றார்.
அதே போல் ஐஜிசிஎஸ்சி தேர்வு எழுதிய மாணவர்களும் ஐசிஇ என்ற சான்றிதளைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்கள் காமேஷ் சரவணன், வெங்கட் சித்தார்த் ஆகிய இருவரும் உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களில் ஏ-பிளஸ் மற்றும் ஏ மதிப்பைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாக இயக்குநர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி ஆகியோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.