அரசுப் பள்ளிகளை தூய்மைப்படுத்த உத்தரவு

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து அரசுப்

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளையும் தூய்மைப்படுத்தி வைத்திருக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு முன்பாக தமிழகத்திலுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வுகள் முடித்து விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளிகள் பூட்டி வைக்கப்பட்டிருந்ததால் வகுப்பறைகளும், பள்ளி வளாகங்களும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன. இதையடுத்து, ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பள்ளி வளாகம், வகுப்பறைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி சுகாதாரமான முறையில் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
இதை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து தீவிரமாக கண்காணித்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 77 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை முழுமையாக செய்திட வேண்டும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கி, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com