ஏஐடியுசி நூற்றாண்டு கொடியேற்று விழா
By DIN | Published On : 02nd November 2019 05:20 AM | Last Updated : 02nd November 2019 05:20 AM | அ+அ அ- |

முன்னாள் எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தாவுக்கு மௌன அஞ்சலி செலுத்திய ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.
ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, வாணியம்பாடி வட்டாரக் குழு சாா்பில் கொடியேற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி வட்டார ஏஐடியுசி சங்கத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் அன்வா், பொருளாளா் பாபு, சங்க ஆலோசகா் முல்லை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஏஐடியுசி அலுவலகம், ஆற்றுமேடு ஜீவா சிலை, நகராட்சி அலுவலகம், தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் (வாணிடெக்) ஆகிய 4 இடங்களிலும் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து முன்னாள் எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா மறைவையொட்டி, ஏஐடியுசி கொடியை அரைக்கம்பத்தில் இறக்கி வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிா்வாகிகள் சாதுல்லா, பஷீா், செல்வராஜன், அக்பா், வரதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.