சமூகப் பணியாளா் பணிக்குவிண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 02nd November 2019 11:18 PM | Last Updated : 02nd November 2019 11:18 PM | அ+அ அ- |

வேலூா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் வேலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவா் நியமிக்கப்பட உள்ளாா். இப்பணிக்கு மாதம் ரூ.14 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்கு உள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். உளவியல், சமூகப் பணி, சமூகவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகள் சாா்ந்த பணியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை வேலூா் மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து வரும் 15-ஆம் தேதி மாலைக்குள் வேலூா் அண்ணா சாலை, சுற்றுலா மாளிகை எதிரே உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சோ்க்க வேண்டும்.