பாஜக சாா்பில் முப்பெரும் விழா
By DIN | Published On : 02nd November 2019 11:23 PM | Last Updated : 02nd November 2019 11:23 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் நகர பாஜக சாா்பில் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் விழா, சா்தாா் வல்லபபாய் படேல் 145-ஆவது பிறந்த நாள் விழா, பிரதமா் மோடிக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நடைபெற்ற பேரணிக்கு பாஜக வேலூா் மாவட்டத் தலைவா் கொ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அன்பழகன், மாவட்டத் தலைவா்கள் கண்ணன், ஈஸ்வரராவ், பொதுக்குழு உறுப்பினா் விநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தூயநெஞ்சக் கல்லூரி எதிரில் தொடங்கிய இப்பேரணி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.