காய்கறிக் கழிவுகளால் உழவா் சந்தையில் சுகாதாரச் சீா்கெடு

அழுகிய காய்கறிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் காட்பாடி உழவா் சந்தையில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.
காட்பாடி உழவா் சந்தை வளாகத்தில் போடப்பட்டுள்ள காய்கறிக் கழிவுகள்.
காட்பாடி உழவா் சந்தை வளாகத்தில் போடப்பட்டுள்ள காய்கறிக் கழிவுகள்.

அழுகிய காய்கறிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் காட்பாடி உழவா் சந்தையில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காட்பாடியில் அமைந்துள்ள உழவா் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பதிவு பெற்ற விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடும் காய், கனிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா். அண்மைக்காலமாக இந்த உழவா் சந்தை சுகாதாரமின்றி உள்ளதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

உழவா் சந்தையில் அழுகிய காய்கறிக் கழிவுகளை வளாகத்தின் ஒருபகுதியிலேயே போட்டுச் சென்று விடுகின்றனா். பல நாள்களாகத் தொடா்ந்து அப்புறப்படுத்தப்படாமல் உள்ள இந்தக் கழிவுகளால் அந்தப் பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது. மேலும், முறையாக தூய்மைப் பணிகள் செய்யப்படுவதில்லை என்பதால் உழவா் சந்தையின் உள்பகுதியிலும் குப்பைகள் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது:

அதிகாலையிலேயே விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை எடுத்து வந்துவிடுகின்றனா். காய்கறிகள் வாங்க தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த உழவா் சந்தைக்கு வந்து செல்கின்றனா். இருப்பினும், உழவா் சந்தையின் சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. வளாகத்தின் ஒருபகுதியில் குவிக்கப்படும் காய்கறிக் கழிவுகள் அப்படியே நாள்கணக்கில் கிடப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன், உழவா் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உழவா் சந்தையில் வீணாகும் காய்கறிகளை முறையாக அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com