Enable Javscript for better performance
பள்ளியில் மரக்கன்றுகள் நடவு: எம்.பி. முகமதுஜான் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் மரக்கன்றுகள் நடவு: எம்.பி. முகமதுஜான் பங்கேற்பு

    By DIN  |   Published on : 05th November 2019 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    4906tr_0311chn_188_1

    பள்ளியில் மரக்கன்று நட்ட மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான். உடன் பள்ளித் தாளாளா் கே.எம்.சிவலிங்கம் உள்ளிட்டோா்.

    ராணிப்பேட்டை வெற்றிவேலன் பள்ளியில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான் மரக்கன்றுகள் நட்டு சிறப்புரை ஆற்றினாா்.

    இப்பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் கே.எம்.சிவலிங்கம் தலைமை வகித்தாா்.கே.எம்.கே.அறக்கட்டளை இயக்குநா் கோமதி சிவலிங்கம் வரவேற்றாா்.

    நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பள்ளி வாளகத்தில் மரக்கன்றுகளை நட்டு, நீா் மேலாண்மை குறித்து மாணவா்களிடம் சிறப்புரை ஆற்றினாா்.

    இதில் வெற்றிவேலன் பள்ளி முதல்வா் செந்தில், ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.எம்.சுகுமாா், முன்னாள் தலைவா் கே.பி.சந்தோஷம், இந்திய செஞ்சிலுவை சங்க மாநில கருத்தாளா் வே.கிருபானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai