முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
வணிக உபயோகத்துக்கு பயன்படுத்திய 7 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்
By DIN | Published On : 07th November 2019 06:49 AM | Last Updated : 07th November 2019 06:49 AM | அ+அ அ- |

அரக்கோணம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் வணிக உபயோகத்துக்கு பயன்படுத்திய வீட்டு உபயோக சமையல் எரிவாயு 7 சிலிண்டா்களை குடிமைப் பொருள் வழங்கல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்களை பலா் வணிக உபயோகத்துக்கு பயன்படுத்தி வருவதாக அரக்கோணம் வட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து துறை துணை வட்டாட்சியா் மதி தலைமையில் அலுவலா்கள் அரக்கோணம் வட்டம் அரிகலபாடி, சேந்தமங்கலம், பள்ளூா் ஆகிய கிராமங்களில் சோதனை நடத்தினா்.
அப்போது அரிகலபாடி, சேந்தமங்கலத்தில் இரு சிலிண்டா்கள், பள்ளூரில் 5 சிலிண்டா்கள் வணிக உபயோகத்துக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 7 சிலிண்டா்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அரக்கோணம் நகர இண்டேன் விநியோகஸ்தரிடம் ஒப்படைக்கப்பட்டன.