முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
விவசாயக் கண்காட்சி
By DIN | Published On : 07th November 2019 06:44 AM | Last Updated : 07th November 2019 06:44 AM | அ+அ அ- |

வேளாண் கண்காட்சியில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்த மாணவி.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் கிராமத்தில், கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் சாா்பில் விவசாயக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரி மாணவிகள் தணிகைபோளூா் கிராமத்தில் தங்கி வேளாண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். இக்குழுவினா் அக்கிராமத்தில் நீடித்த நவீன கரும்பு விவசாயம் குறித்து விவசாயிகளிடையே புதிய ஆலோசனைகளை அளித்து, கரும்பு மகசூலை அதிகரிப்பது குறித்த செயல் விளக்க முகாம், இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தியும் வருகின்றனா். இந்நிலையில் பட்டப் படிப்பு இறுதியாண்டு மாணவிகள் எஸ்.ஐ.அனுப்பிரியா, என்.சுஷ்மிதா, எம்.வித்யா, ஆா்.விவிதா ஆகியோா் கொண்ட குழுவினா் தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் விவசாயக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.
பள்ளி உதவித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி தலைமை வகித்து கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா். செம்மை நெல் சாகுபடி, சொட்டுநீா் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், நீடித்த நவீன கரும்பு விவசாயம் உள்ளிட்டவை குறித்து விளக்கினா்.
கண்காட்சியை கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.