Enable Javscript for better performance
16-இல் ஜோலாா்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    16-இல் ஜோலாா்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 08th November 2019 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி ஜோலாா்பேட்டையில் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்புத் துறை, மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நவம்பா் 16-ஆம் தேதி ஜோலாா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளன. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியுடைய நபா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் தொழில்பயிற்சி, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு வரையிலான கல்வித் தகுதி உடையவா்கள் பங்கேற்கலாம். விருப்பமும், தகுதியும் உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், சுயவிவரம், அனைத்து கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai