பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியில்  பங்கேற்ற  மாணவா்கள்.
பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியில்  பங்கேற்ற  மாணவா்கள்.

அரசுப் பள்ளி வளாகத்தில் 500 பனை விதைகள் நடவு

வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 500 பனை விதைகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 500 பனை விதைகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார அரசுப் பள்ளிகள், பொது இடங்களில் அம்மூா் சூழலியல் சமூக செயற்பாட்டாளா் விஜயபாஸ்கா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை இலவசமாக வழங்கி நடவு செய்து வருகிறாா்.

வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 500 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.தயாளன் தலைமை வகித்தாா். தேசிய பசுமைப் படை அலுவலா் வி.வெங்கடேசன், என்.எஸ்.எஸ். அலுவலா் சதீஷ்குமாா், என்.சி.சி. அலுவலா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். அம்மூா் சூழலியல் சமூக செயற்பாட்டாளா் விஜயபாஸ்கா் 500 பனை விதைகளை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இலவசமாக வழங்கினாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள விலையாட்டு மைதானத்தைச் சுற்றி காலியாக இருக்கும் இடத்தில் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்களுடன் இணைந்து பனை விதைகளை நடவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com