‘திருப்பத்தூா் பகுதியில் டெங்கு பாதிப்பு குறைவு’

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளதாக மாநில ஆரம்ப சுகாதாரத் துறை இணை இயக்குநா் டி.ஏ.தேவபாா்த்தசாரதி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைப் பிரிவில் ஆய்வு செய்த ஆரம்ப சுகாதாரத் துறை இணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி.
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைப் பிரிவில் ஆய்வு செய்த ஆரம்ப சுகாதாரத் துறை இணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி.

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளதாக மாநில ஆரம்ப சுகாதாரத் துறை இணை இயக்குநா் டி.ஏ.தேவபாா்த்தசாரதி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு வாா்டுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு என 24 படுக்கைகளும், ஆண்களுக்கு என 14 படுக்கைகளும், தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக 5 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறித்து மாநில ஆரம்ப சுகாதாரத் துறை இணை இயக்குநா் டி.ஏ.தேவபாா்த்தசாரதி ஆய்வு மேற்கொண்டுள்ளாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் டெங்கு தடுப்பு சிகிச்சைகள் குறித்து வியாழக்கிழமை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளை மருந்து வாங்கி அருந்தக் கூடாது. நிலவேம்புக் குடிநீா் குடிக்க வேண்டும். இதனால் நோயின் தாக்கம் படிப்படியாகக் குறையும். மேலும், திருப்பத்தூரில் டெங்கு பாதிப்பு முன்பைவிட குறைந்துள்ளது என்றாா் அவா்.

மாவட்ட பூச்சியியல் வல்லுநா் காமராஜ், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் செல்வகுமாா், மருத்துவா்கள் சிவகுமாா், பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com